சென்னை பல்லாவரம் கோபாலன் தெருவில் செயல்பட்டு வரும் ப்ளே ஸ்கூலில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஏஞ்சலின் ஜெயஸ்ரீ. இவர் தனது 9 மாத பெண் குழந்தையான கவிஸ்ரீ கார்த்திகாவை தான் பணிபுரியும் இடத்திற்கு உடன் அழைத்து சென்றுள்ளார்.
ப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என ஏஞ்சலின் தேடியபோது, கழிவறையில் உள்ள பக்கெட் தண்ணீர் விழுந்து மூச்சியின்றி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அருகிலிருந்த தனியார் மருத்துவ மனையில் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து வந்த போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.