தமிழ்நாடு

''98 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் முடிந்து விட்டது'' - அமைச்சர் கே.என்.நேரு

Tamil Selvi Selvakumar

சென்னையில் 98 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

சென்னை ரிப்பன் மாளிகையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் தேங்கிய மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

மேலும் 20 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் கூட ஒரு மணி நேரத்தில் மழை நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.