தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு 9வது முறையாக பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு அரசாணை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு 9வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு 9வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட பேரறிவாளனை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு பரோல் வழங்க வேண்டுமென  தாயார் அற்புதம்மாள், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

அதனடிப்படையில், பேரறிவாளனுக்கு கடந்த ஆண்டு,  மே மாதம் பரோல் வழங்கப்பட்டது. பேரறிவாளன்  தொடர் சிகிச்சையில் இருப்பதால் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், வரும் 24ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.