தமிழ்நாடு

ஷூ-வுக்குள் உறங்கிய 2-அடி நீள பாம்பு...பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்!

Tamil Selvi Selvakumar

மதுரையில் ஷூ-வுக்குள் உறங்கிய இரண்டடி நீள சாரைப்பாம்பை பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டுள்ளார்.


மதுரையை அடுத்த திருநகரில் மாணிக்க நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது வீட்டின் வெளியே கழட்டி வைக்கப்பட்டிருந்த ஷூ-வுக்குள் சாரைப்பாம்பு படுத்துறங்கியுள்ளது. மாலை வேளையில் வெளியே செல்வதற்காக ஷூவை மாற்ற முயன்ற போது கழட்டி வைக்கப்பட்டிருந்த ஷூ-வுக்குள் பாம்பு படுத்திருந்ததை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாம்பை வெளியேற்ற முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை என்பதால், நண்பரின் உதவியால் சமூக ஆர்வலரும், பாம்புபிடி வீரருமான சகாதேவன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து தகவலறிந்து வந்த பாம்பு பிடி வீரர் சகாதேவன், ஷூவுக்குள் சுருண்டு கிடந்த இரண்டு அடி நீள சாரை பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுள்ளார்.

இருப்பினும், ஷூ-வுக்குள் பாம்பு படுத்துறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டின் வெளியே கழட்டி வைக்கப்பட்டிருக்கும் செருப்பு மற்றும் ஷூக்களை கவனமுடன் கையாள வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணமாக இருப்பதாக பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.