நெல்லை மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோ நாட்டார்குளம் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் செல்வ நவீன் என்ற 5 வயது சிறுவன் ஆட்டோவுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு, பின்னர் காயமடைந்த மற்ற மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.