தமிழ்நாடு

தமிழகத்தின் மாவட்டங்களை 2 நிமிடங்களில் கூறும் சாதனை முயற்சியில் ஈடுபட்டு வரும் 5 வயது சிறுமி

சூளகிரியை சேர்ந்த, 5 வயது சிறுமி, தலைநகரங்களையும், தமிழகத்தின் மாவட்டங்களையும், இரண்டே நிமிடங்களில் பேசி சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மில்லத் நகரை சேர்ந்தவர்கள் குமார்-தனலட்சுமி தம்பதியர். இவர்களின் 5 வயது மகள் ஸ்ருதிகா.

தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வரும் இவருக்கு, அதிக ஞாபக சக்தி இருப்பதால், இவரது பெற்றோர் பொது அறிவு, தற்காப்புக் கலை உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

அதன் விளைவாக, ஸ்ருதிகா தற்போது,  தலைநகரங்கள் மற்றும் தமிழகத்தின் மாவட்டங்களின் பெயர்களை இரண்டே நிமிடங்களில் கூறி சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.