வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாவில், பரத கலைஞர் காளிதாஸின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
மேடையில் மாணவ, மாணவிகளுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்த போது, ஏற்பட்ட நெஞ்சு வலியையும் பொருட்படுத்தாமல், பாடல் முடிந்தவுடன் நெஞ்சை பிடித்து சேரில் அமர்ந்தார்.
புகழ்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் பரதம் ஆடிய போது இவரது உயிர் பிரிந்த சம்பவம் கோவிலில் நிகழ்ச்சியை காண வந்த பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.