தமிழ்நாடு

100 ஆடுகளை பலியிடும் வினோத விழா...ஆண்கள் மட்டும் அசைவம் உண்பார்களாம்; பெண்கள் இலையை மட்டும் எடுக்கனும்மா!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 100 ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டும் உண்ணும் அசைவத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

Tamil Selvi Selvakumar

இளையான்குடி காவனூரில் வைகாசி மாதத் திருவிழாவின்போது, கிடா வெட்டி படையலிட்டால் விவசாயம் செழிக்கும் எனக் கருதி அப்பகுதி மக்கள் வினோத நிகழ்வு ஒன்றை நடத்துவர்.

அதன்படி இரவில் 100 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பின், காவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு அசைவ உணவை உண்டு செல்வர்.

இதையடுத்து ஆண்கள் சாப்பிட்ட பின் காய்ந்த இலையை பெண்கள் மட்டுமே எடுக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இவ்விழாவில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு உணவருந்திச் சென்றனர்.