தமிழ்நாடு

திருச்சியில் விமான பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டு..!!

Malaimurasu Seithigal TV

இரவு  திருச்சியில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த இண்டிகோ விமான பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தோஷ் ராஜம் (வயது 22 ) என்ற பயணியின் பேக்கில் 5.56 mm வெடிக்காத துப்பாக்கி குண்டு ஒன்று கண்டறியப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தான் மாணவர் எனவும் தனது பேக்கில் துப்பாக்கி குண்டு எவ்வாறு வந்தது என தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.