சென்னையில் நட்சத்திர ஓட்டலில் மது அருந்த அனுமதிக்காததால் காரில் வேகமாக சென்று இரும்பு கேட்டை உடைத்த கல்லூரி மாணவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆம் தேதி கிண்டி கத்திப்பாராவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு மது அருந்த இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது வயது குறைவாக உள்ளதாக கூறி ஒட்டல் ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஓட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் காரை வேகமாக ஓட்டி கேட்டை இடித்து தள்ளி வீடியோ வைரலாகி வருகிறது.