தமிழ்நாடு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை... மாணவர்கள் 30 பேருக்கு தொற்று உறுதி !

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 30-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tamil Selvi Selvakumar

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர்.  

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 2-வது கட்டமாக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும்  சுமார் 200 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாக மருத்துவக் கல்லூரி சார்பில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.