தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி சீருடையுடன் கைது!!

பணியை முறையாக செய்யாததால், உயர் பதவி வகிக்கும் காவலரை சீருடையில் இருக்கும்போதே ...

மாலை முரசு செய்தி குழு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேக்கரியில் நடைபெற்ற அடிதடி சம்பவத்தில் முருகன் என்ற சிமெண்ட் முருகன் கொடுத்த புகார் மீது ஒரு மாத காலமாகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் Sc / St Act -ன் படி காஞ்சிபுரம் டி.எஸ்.பி சங்கர் கணேஷை 22.09.2025 வரை சிறையில் அடைக்க காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் அதிரடி உத்தரவு. 

பணியை முறையாக செய்யாததால், உயர் பதவி வகிக்கும் காவலரை சீருடையில் இருக்கும்போதே கைது செய்து நீதிமன்ற பணியாளர்களால் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.