தமிழ்நாடு

மன விரக்தியில், தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட பிரபல ரவுடி!!

Malaimurasu Seithigal TV

காசிமேட்டில் மன விரக்தியால் பிரபல ரவுடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னை, காசிமேடு, சூரிய நாராயண தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி திருப்பதி (41). முதல் தர குற்றவாளியான இவர் மீது நான்கு கொலை வழக்குகள் உட்பட சுமார் 22 வழக்குகள் உள்ளது. ரவுடி என்பதால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. தனக்கு, திருமணமும் ஆகவில்லை என்ற விரக்தியில், கடந்த வாரம் வாரணாசி சென்று, நேற்று வீடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய இவர் சின்ன சின்ன செலவுகளுக்கு கூட வீட்டு வேலை செய்துவரும் தனது தாயிடம் செலவிற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால், பொறுமையிழந்த தாய், பணம் தர மறுத்து சென்று விடவே, மனமுடைந்து போன அவர், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீடு திரும்பிய தாய் இதை கண்டு அதிர்ச்சியடைந்து, காசிமேடு போலீசாரூக்கு தகவல் அளிக்கவே, போலீசார் திருப்பதியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.