தமிழ்நாடு

மெட்ரோ ரயிலுடன் இணைக்கப்படும் பறக்கும் இரயில்!

Malaimurasu Seithigal TV

பறக்கும் ரயில் சேவை விரைவில் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சென்னை மாநகரப் பகுதிகளில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பறக்கும் ரயில் சேவையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆய்வு செய்து மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டு,மெட்ரோ ரயில் சேவையை பறக்கும் ரயில் சேவையுடன் இணைக்கும் வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததும், பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்தி மெட்ரோ ரயில் சேவைக்கு இணையான சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் டெண்டர் விட்டு பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.