தமிழ்நாடு

செல்லப்பிராணிகளை கொடூரமாக அடித்து கொல்லும் கும்பல்: உணவகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதா?

இராமநாதபுரம் அருகே செல்லப்பிராணிகளை கொடூரமாக அடித்து கொல்லும் கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  

Malaimurasu Seithigal TV

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 70 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் தங்களது வீடுகளில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை விரும்பி வளர்த்து வருகின்றனர்.

இதற்கிடையில் சமீபகாலமாக இரு சக்கர வாகனங்களில் வரும் மர்ம நபர்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் மற்றும் வீதிகளில் சுற்றும் பூனைகள் கொடூரமாக கொன்று அதனை  எடுத்து செல்கின்றனர். இந்த கொடூர தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தபகுதிக்கு அடிக்கடி வரும் மயில்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக குற்றமசாட்டிய பொதுமக்கள், இந்த மர்ம கும்பல் மயில்களையும் வேட்டையாடியிருக்கலாம் என சந்தேகம் எழுவதாக தெரிவித்தனர். இவ்வாறு அடித்து கொல்லப்படும் பூனைகள் உணவகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதா ? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா என  போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.