தமிழ்நாடு

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் வார்டில் புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு..!

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் வார்டில் புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரி பள்ளம் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. பல்வேறு பிரிவு கட்டிடங்களாக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது,இதில் கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தில் பல்வேறு நோய்களுக்கான பிரிவுகளில் உள் நோயாளிகள் 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனை உள் நோயாளிகள் அறையில் நல்ல பாம்பு புகுந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது, இந்த வீடியோவை நோயாளியின் உறவினர் ஒருவர் எடுத்து சமூக வலைதளங்கள் பரப்பி உள்ளார், தற்போது அந்த காட்சி வைரலாகி உள்ளது, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையை சுற்றிலும் செடிகள் கொடிகள்,காடு போல் இருப்பதால் இது போன்ற விஷ ஜந்துக்கள் மருத்துவமனை நோயாளிகள் அறைக்கும், கல்லூரிகளும் புகும் அபாயம் ஏற்கனவே இருந்து வந்தது, இது தொடர்பாக பல புகார்கள் தெரிவித்திருந்தும் கண்டு கொள்ளாத நிலையில் இன்று மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு அறையில் நல்ல பாம்பு வந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது மேலும் தற்போது இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.