தமிழ்நாடு

பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்...!

Tamil Selvi Selvakumar

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மாணவா்களை ஏற்றிக்கொண்டிருந்த பள்ளி பேருந்து மீது லாாி மோதி விபத்து ஏற்பட்டதில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்த தனியார் மழலையர் பள்ளியின் பேருந்து, அப்பகுதியில் உள்ள  பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டிருந்தது. அப்பொழுது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி ஒன்று பள்ளி பேருந்தின் பின்புறம் மோதியது. ஏற்கனவே, 25 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேருந்திற்குள் இருந்ததால், அந்த விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்தனர். மற்ற மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். 

இதையடுத்து லாரி மோதிய விபத்தில் காயமடைந்த நான்கு மாணவர்களையும் அப்பகுதி மக்கள் மீட்டு, தொழுதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர். 

இதனிடையே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் முதல்  ராமநத்தம் வரை அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல் துறையினர் விபத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.