தமிழ்நாடு

உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...! மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழு...!

Malaimurasu Seithigal TV

தெற்கு அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எனவே அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 6 குழுக்களாக, தமிழகத்தின் பாதிப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக செல்ல அறிவுறுத்தப்படுள்ளது.

மேலும் அவர்கள், வெள்ள மீட்பு உபகரணங்கள், சரிந்த கட்டமைப்பு தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள், பொருத்தமான தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் உள்ள  24x7 கட்டுப்பாட்டு அறை காற்றழுத்த தாழ்வு பகுதியை கண்காணித்து வருகிறது என்றும் தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.