திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி என்ற அந்த பெண்ணுக்குக் கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. நவம்பர் 16ஆம் தேதி அன்று வயிற்றை சுத்தம் செய்கிறேன் என சாந்தி குழந்தைக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கும் குழந்தை அழைத்துச் செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.