தமிழ்நாடு

தஞ்சையில் புதிய நிலக்கரி சுரங்கமா? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு!

Tamil Selvi Selvakumar

தஞ்சையில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால் அனுமதி தரப்படாது என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.


தமிழ்நாட்டில் 66 இடங்களில் துளையிட்டு நிலக்கரி எடுக்க மத்திய அரசு முன்னதாக அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி, குறிச்சிக்கோட்டை, பரமன்கோட்டை, கீழ்குறிச்சி, அண்டமி, கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் துளையிட்டு நிலக்கரி எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து தஞ்சையின் ஒரத்தநாடு வட்டத்தில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், பாதுகாப்பான வோளாண் மண்டல சட்டம் தஞ்சையில் அமலில் இருப்பதால், விவசாயிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தஞ்சையில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருவது வெறும் ஆரம்பகட்ட ஆய்வுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக மாநில அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அங்கு உண்மையிலேயே கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டாலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால் அனுமதி தரப்படாது எனவும், விவசாயிகள் கவலையடைய வேண்டாம் எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.