சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த சைபுல் ஷேக் என்பவரின் சகோதரன் குலாம் ரசூலும் அதே பகுதியில் பணிபுரிய சென்னை வந்தார்.
அப்போது அலுவலகத்தின் 10வது மாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தவறி விழுந்த குலாம் ரசூல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.