இரண்டு லாரியின் நடுவே இருசக்கர வாகன ஓட்டுநர் சிக்கி நசுங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் போக்குவரத்து கூட்ட நெரிசலில் இரண்டு லாரி நடுவே இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த மகாராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் வயது (55) என்பவரும் மீதும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீதும் எதிர்பாராதவிதமாக லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி மற்றொரு லாரியின் பின்னால் நசுங்கும் போது பொதுமக்கள் கத்தியதை அடுத்து லாரி நின்றது.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
இதில் இரு சக்கர வாகன ஓட்டுனர் அன்பழகன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து போக்குவரத்து கூட்டநெரிசலை தடுப்பதற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பதே வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.