தமிழ்நாடு

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த நபர்.... ரயில் மோதி உடல் துண்டு துண்டான சோகம்!  

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Malaimurasu Seithigal TV

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 சென்னையில் உள்ள எழும்பூர்-பூங்கா ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள தண்டவாளத்தை கடக்க 25 வயதான ஒரு நபர் முயற்சி செய்துள்ளார்.அப்போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வேகமாக வந்த  வாலிபர் மீது ரயில் தாறுமாறாக மோதியததில் அவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழுப்பூர் போலீசார் அந்த இளைஞனின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த வாலிபர் பற்றிய தகவல்களையும் ,அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றியும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.