தமிழ்நாடு

கோழிப்பண்ணைக்குள் தஞ்சம் அடைந்த மலைப் பாம்பு..! போராடிய தீயணைப்பு வீரர்கள்..!

நாட்டறம்பள்ளி அருகே கோழிப்பண்ணையில் தஞ்சம் அடைந்த மலைப்பாம்பு....

Malaimurasu Seithigal TV

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன்(42) ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது வீட்டின் அருகே கோழி பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இரை தேடி பண்ணையில் தஞ்சம் அடைந்ததுள்ளது.    

இதனை அறிந்த விவேகானந்தன், உடனடியாக நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மலை பாம்பை பிடித்து பச்சூர் காப்பு காட்டில் விட்டனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.