தமிழ்நாடு

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை 15 மாதங்களில் அமல்படுத்த உத்தரவு!

Tamil Selvi Selvakumar

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டத்தை   முதற்கட்டமாக இரு மாவட்டங்களில் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தனர். 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் மூலம்  நீலகிரி மற்றும் இதர மலைப் பிரதேசங்களில் 96 சதவீதம் மதுபாட்டில்களை  திரும்பப்பெற்றுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்தது. 

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 15 மாதங்களில் மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.