தமிழ்நாடு

அருவி தடாகத்தில் தவறி விழுந்த பயணி பத்திரமாக மீட்பு

குற்றாலம் மெயின் அருவி தடாகத்தில் தவறி விழுந்த சுற்றுலா பயணி - தீயனைப்பு வீரர்கள் துரிதமாக மீட்டனர்.

மாலை முரசு செய்தி குழு

தென்காசி மாவட்டம் குற்றால மெயின் அருவி தடாகத்தில் விழுந்த சுற்றுலா பயணியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள குற்றால அருவியில் தினந்தோறும் ஆயரக்கனக்கான சுற்றுலா பயணிகள் நீராடுவது வழக்கம். இந்நிலையில் தற்போது குற்றால அருவியில் நீர்வரத்து சீராக வருவதால் சுற்றலா பயணிகள் குளித்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாரத விதமாக சுற்றுலா பயணி ஒருவர், அருவியில் இருந்த தடாகத்திற்குள் தவறி விழுந்தார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.