தமிழ்நாடு

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியர்...விடாத லஞ்ச ஒழிப்புத்துறை!

Tamil Selvi Selvakumar

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 

லஞ்சம் கேட்ட வட்டாட்சியர்:

மணப்பாறை அருகே மஞ்சம்பட்டி  கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன். இவரது நிலத்தின் அருகே வளர்ந்துள்ள புங்க மரத்தின் கிளைகள் மின் கம்பியில் உரசியதால், விவசாயி மரக்கிளைகளை வெட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து இதுகுறித்து விவசாயியிடம் விசாரணை மேற்கொண்ட மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. மேலும், பணம் கொடுக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து விவசாயி திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். 

மடக்கி பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை:
 
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி  மணிகண்டன் தலைமையிலான குழுவினரின் ஆலோசனையின் பேரில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற சுப்பிரமணியன், வட்டாட்சியர் லட்சுமியிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் திருவரங்கம் கோட்டாட்சியர் வைத்தியநாதனிடம் ஒப்படைத்தனர்.