தமிழ்நாடு

பேருந்தில் பெண் பயணியிடம் தவறாக நடக்க முயன்ற போதை ஆசாமி...! போலீசார் கண்முன்னே சரமாரியாக தாக்கிய பெண்..!

போலீசார் கண்முன்னே பேருந்தில் தவறாக நடக்க முயன்றவரை பெண் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் நெல்லையில் அரங்கேறியுள்ளது.

Tamil Selvi Selvakumar

நெல்லை பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில் சென்ற பேருந்தில் பெண் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது அதே பேருந்தில் ஏறிய மணிகண்டன் என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் பயணி மணிகண்டனை சாரமாரியாக தாக்கியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பெண்ணை சமாதான படுத்தியும் ஆத்திரம் தாங்க முடியாத அந்த பெண், போலீசார் கண்முன்னே மணிகண்டனை தாக்கியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் அதிக மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும், மதுபோதையில் தவறாக நடக்க முயன்றவரை போலீஸ் கண்முன்னே பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.