வானில் பல்வேறு அரிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பூமி தன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்த நிலையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றியும் வருகிறது. மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி சரியாக பூமியின் மத்திய ரேகை பகுதியில் படுவதால் நமக்கு சம பகல் இரவு ஏற்பட்டு வருகின்றது. இதை நாம் சம பகல் இரவு நாள் என்று அழைக்கிறோம். இது ஒரு வருடத்தில் இரண்டு தினங்களில் மட்டுமே ஏற்படும் ஒரு நிகழ்வாககும்.
இதனை கண்டுகளிக்க கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையத்தில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தொலைநோக்கி மூலமாக வான் இயற்பியல் ஆய்வு மையத்தை சேர்ந்தவர்கள் காண்பித்தனர் . இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர் . இதற்கு அடுத்த சம பகல் இரவு நாள் மார்ச் 21 ஆம் தேதி நடைபெறும் எனவும் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.