தமிழ்நாடு

செல்பி மோகத்தால் கூவத்தில் விழுந்த இளைஞர்... தீயணைப்புத்துறையால் மீட்கப்பட்டார்...

செல்பி எடுக்கும் போது நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் விழுந்த நபரை தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் மீட்டனர்.

Malaimurasu Seithigal TV

இன்று காலை 5.30 மணியளவில் நேப்பியர் பாலத்தில் இருந்து சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கூவம் ஆற்றில் விழுந்துள்ளார் பொதுமக்கள் தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அண்ணாசதுக்கம் காவல்துறையினர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டனர். 

விசாரணையில் அந்த நபர் பெரியமேட்டைச் சேர்ந்த கார்த்தி (30) என்பது தெரியவந்தது. இவர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது அதிகாலை பொழுது அழகாக தெரிந்ததால் செல்பி எடுக்க முற்பட்டதாகவும், அப்போது தவறி பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் விழுந்ததும் தெரியவந்தது.

பின்பு முதலுதவி அளிக்கப்பட்டு நலமுடன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.