தமிழ்நாடு

ராமாபுரத்தில் நடந்த விபத்து! டிரைவர் உட்பட 7 பேர் படுகாயம்!

சென்னை போரூர் அருகே, அரசு பேருந்து மீது ராட்சத கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

Malaimurasu Seithigal TV

ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணி இரவு பகலாக   நடைபெற்று வருகிறது.  இங்கு ராட்சத தூண் அமைப்பதற்கு தேவையான கம்பிகளை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி ஒன்று வந்து நின்றது.

இதையடுத்து சுமார் 30 அடி நீளத்திற்கு  கட்டப்பட்டிருந்த இந்த கம்பிகளை கிரேன் மூலம்  ஏற்றும் பணி  மேற்கொள்ளப்பட்டது.

இதில் பளு தாங்காமல் நிலைத்தடுமாறிய கிரேன், கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக குற்றத்தூரில் இருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

 இதில் பேருந்தின் முன் கண்ணாடிகள் உடைந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில ஓட்டுனர்கள் அய்யாதுரை, கண்டெய்னர் லாரி ஓட்டுனர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.