தமிழ்நாடு

சிலிண்டர் குடோன் வெடித்த விபத்து..! நேரில் சென்று விசாரித்த அமைச்சர்..!

Malaimurasu Seithigal TV

காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான சிலிண்டர் குடோன் வெடித்து விபத்துக்குள்ளாகி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12-பேரை குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். அவருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் இருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், விபத்து நடந்த இடத்தில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் படுகாயமடைந்த 12-பேரில் 6-பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அவர்களை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் சிலிண்டர் குடோன் எப்படி வந்தது என்பது குறித்த உரிய விசாரணை நடத்தப்படும் எனவும், இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.