கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அரசு பேருந்துகளால் ஏற்பட்ட விபத்து குறித்த விவரங்களைக் கேட்டு அனைத்து மாவட்ட எஸ்.பி-க்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அரசு பேருந்து விபத்தில் சிக்கி பல பேர் பலியாவதும், படுகாயம் அடைவதும் தொடர் சம்பவங்களாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அரசு போக்குவரத்து பேருந்துகளால் ஏற்பட்டுள்ள விபத்துகள் எத்தனை? விபத்தில் எத்தனை பேர் பலியாகியுள்ளனர்? உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்குமாறு அனைத்து மாவட்ட எஸ்.பி-க்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.