2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. பாஜக -வோடு கூட்டணி கிடையவே கிடையாதது என்று சொன்ன எடப்பாடி கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி பாஜக வோடு கூட்டணி அமைத்து தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
அதிமுக பாஜக கூட்டணியால் , ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிலை காரத்தில் தொங்க தொடங்கியது. காரணம் அவர்கள் கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக -வில் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர் ஆகிய 20 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் இந்த கூட்டம் நடைபெற்றது.
ஓபிஎஸ், எம்.எல்.ஏ வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பு இல்லாத நிலையே 2019 தேர்தலில் தோல்விக்கான காரணம். மேலும் இரண்டு பிரிவுகளாக பிரிந்ததற்கும் காரணம் 2026 தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால் அதிமுக கடுமையான தோல்வியை சந்திக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்
தொடர்ந்து இந்தக் கூட்டத்தில், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் அணி எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது தொடர்பான கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெறுவதற்காக, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒரு கடிதம் வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஓபிஎஸ், வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்தக் கருத்துகளைப் பெற்றனர்.
கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ வைத்தியலிங்கத்திடம் அதிமுக - பாஜக கூட்டணி தோன்றியதிலிருந்து ஓபிஎஸ் அணிக்கு மதிப்பு குறைந்துவிட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்., " NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது. நிர்வாகிகளுடைய கருத்துக்களையும் கேட்கிறோம். நாளை முடிவு எடுக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோமா? இல்லையா? என்பதை நாளை செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ் சொல்லுவார்"என தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்