தமிழ்நாடு

தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் செய்த சாதனை

தமிழ்நாட்டில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 7 விழுக்காடு நபர்களுக்கு தடுப்பூசியின் இரு டோஸ்களும் போடப்பட்டுள்ளன.

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 7 விழுக்காடு நபர்களுக்கு தடுப்பூசியின் இரு டோஸ்களும் போடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நேற்று 3 லட்சத்து 26 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கையானது ஒரு கோடியை தாண்டியுள்ளது. குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 21 விழுக்காடு நபர்கள் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். இதே பிரிவில் 7 விழுக்காடு நபர்கள் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

இதே போல் அரசால் நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி முகாம்களில் 18 வயது முதல் 44 வயது வரையில் உள்ளவர்களில் 5 விழுக்காடு நபர்கள் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். மே ஒன்று தொடங்கி இதுவரையிலான காலகட்டத்தில் தனியார் மையங்களில் 3 லட்சத்து 59 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.