தமிழ்நாடு

அரசின் திட்டங்கள் ஒரு குழந்தை போல...பேணி காத்தால் தான் நன்கு வளரும்...முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் அனைவரும் செயல்வீரர்களாக செயல்பட வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை  நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக அரசின் முத்திரை பதிக்கும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்களை குழந்தைகளாக பாவித்து, அவற்றை அதிகாரிகள் பேணிக் காத்தால் அவை நன்கு வளரும் என்று கூறினார். மேலும்,  அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் அனைவரும் செயல்வீரர்களாக திகழ வேண்டும் என்று துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.