தமிழ்நாடு

ஒரே நாளில் ரூ.75,800 அபராதம் வசூல் ... கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் மீது நடவடிக்கை...

சென்னையில்  நேற்று ஒரே நாளில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதியில், கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் காவல்துறையினருடன் இணைந்து சிறப்பு அமலாக்க குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து தொடர்ச்சியாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிறப்பு அமலாக்க குழுவினர் நடத்திய ஆய்வில் நேற்று மொத்தம் 75,800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.