நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. உணவக உரிமையாளரான இவரது மகன் சூர்யா உக்ரைன் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையே நிகழ்ந்து வரும் போர் உச்சக்கட்டத்தை எட்டி இருப்பதால்“ தனது மகனை மீடக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.