தமிழ்நாடு

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு வைக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களை தேர்வு எழுத வைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Suaif Arsath

சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் மாநில அளவில் நடைபெறும் சிலம்ப போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அரசு பள்ளிகளில் 5 வயதை கடந்த மாணவர்களின் சேர்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருவதாக கூறினார்.  6 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் பொதுதேர்வுக்கு வருகை தராத காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்த அமைச்சர், மாணவர்கள் சிறப்பு தேர்வுகள் எழுதவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.