அரசு மருத்துவமனையில் கோக்லியர் இம்பிளான்ட்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், பிறவிலேயே காது கேளாதோருக்கு அளிக்கப்படும் கோக்லியர் உள்வைப்பு (cochlear implant) சிகிச்சை முறையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் cochlear implant சிகிச்சை முறை விரைவில் தொடங்கப்படும் என்றார். தமிழகத்தில் தற்போது வரை, 5 ஆயிரத்து 35 பேருக்கு இவ்வகையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வெளிப்படை தன்மையுடன் விசாரணை - அமைச்சர் உறுதி
தொடர்ந்து பேசிய அமைச்சர், கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் குறித்த கேள்விக்கு, பிரியா மரணம் தொடர்பாக தற்போது 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஒரே மாதிரியான தண்டனை கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது என பதிலளித்தார்.
தற்போது யாரெல்லாம் இந்த விவகாரத்தில் கவனக் குறைவாக ஈடுபட்டுள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்படி தவறு இழைத்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடைபெறும் மற்றும் கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில், தவறு இழைத்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.