தமிழ்நாடு

சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்...

தமிழகத்தில் சிமெண்ட் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜுன் மாதம் சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு 490 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசின் சீறிய நடவடிக்கையின் மூலம் 420 ரூபாய்க்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிலக்கரி தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவினங்கள் காரணமாக மீண்டும் விலை உயர்ந்து தற்போது 440 வரை விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 4.7 சதவீதம் தான் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது என்றும் விளக்கமளித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள விலையேற்றத்தை குறைக்க தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்.,தமிழக அரசின் மூலம் கடந்தாண்டு 3 லட்சத்து 67 ஆயிரம் மெட்ரிக் டன் சிமெண்ட் விற்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு 7 லட்சத்து 68 ஆயிரம் மெட்ரிக் டன் சிமெண்ட் விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சிமெண்ட் விற்பனையில் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் பங்கீடு மிகவும் குறைவாக இருந்ததாக குற்றம்சாட்டிய அவர், நடப்பாண்டில் திமுக ஆட்சியின் நடவடிக்கையால் டான்செம்மின் பங்கு 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், தமிழக அரசின் டான்செம் நிறுவனம் வலிமை என்ற புதிய பெயரில் சிமெண்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும்., இதன்மூலம் தமிழ்நாட்டில் சிமெண்டின் சில்லரை விற்பனை குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.