தமிழக வெற்றிக்கழகத்தை நடிகர் விஜய் துவங்கிய நாளிலிருந்து இளைஞர் மத்தியில் அவருக்கு நல்ல வவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இவர் திமுக -விற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு வருகிறார். தந்து கொள்கை எதிரியாக பாஜக -வையும் அரசியல் எதிரியாக திமுக -வையும் முன்னிறுத்தியே அரசியல் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக -வில் இணைந்த சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தவெக தலைவர் விஜய்யை “துணை முதல்வர் உதயநிதி ஏசி கேரவனில், சொகுசு விமானத்தில் நண்பர்களின் திருமணத்துக்கு செல்லும் போலி அரசியல்வாதி கிடையாது” இவ்வாறு தாக்கி பேசியிருந்தார். அதுதான் அவரின் முதல் அரசியல் மேடை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் அவ்வாறு பேசியதற்கு முகாந்திரம் உண்டு. அந்த சமையத்தில் தான் விஜய் கீர்த்தி சுரேஷின் திருமண விழாவிற்கு சென்று வந்த புகைப்படங்கள் இணையத்தில் வரலானது. இவரின் இந்த பேச்சை நெட்டிசன்கள் பலர் கலாய்த்து தள்ளியிருந்தனர்.
இதை தொடர்ந்து அவர் மீண்டும் ஒரு வீடியோ பதிவை போட்டுள்ளார். அதில், “விஜய் அண்ணா மீது எனக்கு எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் இல்லை. நான் ஒரு அரசியல்வாதியாகத்தான் அவரை கேள்வி கேட்கிறேன்” என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் பேசும்போது “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணா மீது எனக்கு எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் கிடையாது. நான் ஒரு அரசியல்வாதியாகத்தான் அவரை கேள்வி கேட்கிறேன். எதிர்க்கட்சியில் இருக்கும் பெண்களுக்கும், அவருடைய கட்சியில் இருந்து வெளியே வந்த பெண்களுக்கும் அவருடைய தொண்டர்கள் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதை அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். உங்களுக்கு பாதுகாவலர்கள் இருப்பது போல அவர்களுக்கு பாதுகாவலர்கள் இல்லை. ஒரு கட்சியின் தலைவராக நீங்கள் இதையெல்லாம் தடுக்க வேண்டும். ஒரு திறமையான அரசியல்வாதி மக்கள் மீதுதான் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரத்தின் மீது அல்ல” இவ்வாறு திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.