தமிழ்நாடு

ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு

அனைத்து இடங்களிலும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

Jeeva Bharathi

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய உள்ள நிலையில்,

எக்ஸ் பதிவு மூலம் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்த தவெக தலைவர் விஜய், இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்து, மனு அளித்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை, எனவும் எனவே மாநில அரசு, கேட்கும் நிவாரணை தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்று விஜய் அளித்த மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக தமிழக பெண்களுக்கு விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் குழந்தைகள், பெண்கள், மாணவிகளுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டூ விட்டது என குற்றம்சாட்டியிருந்தார்.

ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை எனவும் எனவே கல்வியில் கவனம் செலுத்துங்கள், எல்லா சூழல்களிலும் அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன் என விஜய் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.