தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பாக்கத்தில் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்." தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற 2 ம் ஆண்டு துவக்க விழாவில் திமுக வை விமர்சித்த நிலையில் தற்போது தனது கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய்.
இதனை தொடர்ந்து திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.