தமிழ்நாடு

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதங்கள் சிறை...! காரணம் உள்ளே..!

Malaimurasu Seithigal TV

நடிகையும், பாஜக முன்னாள் எம்.பியுமான  ஜெயப்பிரதாவுக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், தான் நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ தொகையை அரசுக் காப்பீட்டு கழகத்தில் ஜெயப்பிரதா செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

இதுதொடர்பாக தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஜெயப்பிரதாவுக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வழக்கை எதிர்த்து ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.