தமிழ்நாடு

நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட புதிய வீடியோ வைரல்...!

Tamil Selvi Selvakumar

நடிகை விஜயலட்சுமியை வீட்டைவிட்டு வெளியே செல்லுமாறு வீரலட்சுமியுடன் இருக்கும் நபர் கூறும் வீடியோ இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது. 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் வீரலட்சுமியின் வீட்டில் இருக்கும் நபர் விஜயலட்சுமியை வீட்டை விட்டு வெளியே போக கூறுவதும், அதற்கு விஜயலட்சுமி தான் ஏன் போக வேண்டும் என கேட்பதுமான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை நடிகை விஜயலட்சுமி தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் வீரலட்சுமியுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை விஜயலட்சுமியை, வீட்டிலிருந்து வெளியே போகுமாறு வீரலட்சுமி அருகில் இருக்கும் நபர் சொல்லும் வீடியோ சற்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.