தமிழ்நாடு

தென்காசி அடவிநயினார் கோவில் அணை நிரம்பியது

Malaimurasu Seithigal TV

மாவட்டத்தின் மிகப்பெரியதும் 132 கன அடி கொள்ளவு கொண்ட அடவிநயினார் கோவில் அணை நிரம்பியது.  உபரிநீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி. தென்காசி மாவட்டத்தில் குண்டாறு, கடனாநதி, இராமநதி, கருப்பாநதி' அடவி நயினார் கோவில் அணை என மொத்தம் 5 அணைகட்டுகள் உள்ளது.

இதில் 36.10 கனஅடி கொள்ளவு கொண்ட செங்கோட்டை குண்டாறு அணை, 85 கன அடி கொள்ளவு கொண்ட கடனாநதி மற்றும் 84 கன அடி கொள்ளவு கொண்ட இராமநதி ஆகிய 3 அணைகளும் ஏற்கனவே நிரம்பி அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரிநீராக அனையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போன்று தென்காசி மாவட்டத்தின் மிகப் பெரிய அனையான 132 கனஅடி கொள்ளவு கொண்ட மேக்கரை அடவிநயினார் கோவில் அணை தற்போது தனது முழு கொள்ள வை எட்டி அணை முழுவதும் நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 30 கனஅடி நீர் அணையில் இருந்து உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போன்று சொக்கம்பட்டியில் 72 கன அடி கொள்ளவு கொண்ட கருப்பாநதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் தற்போது அணையின் நீர் மட்டம் 68 கனஅடியாக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரிரு தினங்களுக்குள் கருப்பாநதி அணையும் தனது முழு கொள்ளளவை எட்டும் என்பதால் தென்காசி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.