தமிழ்நாடு

உடல் உறுப்புகள் தானம் பெறவும், வழங்கவும் ஆதார் கட்டாயம்.!!

உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழிலில், பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையதளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஓர் மருத்துவமனையில் இருந்து மற்றோர் மருத்துவமனைக்கு மாற்றவும் ஆதார் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் தொடர்பு சாரா சேவைகளை பெறவும் ஆதார் கட்டாயம் என்றும்,  தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை, அவருக்கு தொடர்பில்லா சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.