adhav arjuna  
தமிழ்நாடு

கரூர் துயரம்! ஆதவ் அர்ஜுனாவை விட்டு விளாசிய நீதிமன்றம்.. இன்று இரவுக்குள் தட்டித் தூக்க காவல்துறை முடிவு?

நீதிமன்றத்தின் கேள்விகள் அனைத்தும் தவெக-விற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் ....

மாலை முரசு செய்தி குழு

'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் நடிகர் விஜய் தலைமையில் கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், தற்போது தமிழக அரசியலில் மட்டுமின்றி, கட்சியின் நிர்வாக மற்றும் சட்டரீதியான எதிர்காலத்திலும் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இந்த வழக்கில் காவல்துறையின் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்றத்தின் கேள்விகள் அனைத்தும் தவெக-விற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் எதிராகத் திரும்பியுள்ள நிலையில், இந்தக் கடுமையான சட்ட நெருக்கடியில் இருந்து மீள, நடிகர் விஜய் நேரடியாக டெல்லியில் உள்ள தேசியத் தலைமையின் உதவியை நாட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில்தான் கரூர் விவகாரம் குறித்த வழக்கில், பல தரப்பு வாதங்கள் இன்று விவாதிக்கப்பட்டன.

கடந்த செவ்வாய்க்கிழமை தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சியைப் போல தமிழகத்தில் புரட்சி வெடிக்க வேண்டும் என வன்முறையைத் தூண்டும் விதமாக சர்ச்சைப் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்புகள் வெளியான நிலையில் சில நிமிடங்களிலேயே, ஆதவ் அர்ஜுனா அதனை நீக்கினார்.

வன்முறையைத் தூண்டும் விதமாக சர்ச்சைப் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது கடுமையான கேள்வி எழுப்பினார். இன்று இரவு ஆதவ் அர்ஜுனா கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.