தமிழ்நாடு

ஆதியோகி சிலை விவகாரம்: ஈஷா பதில்...!

Malaimurasu Seithigal TV

கோவையில், ஈஷா யோகா கட்டடம் கட்ட முறையான அனுமதி பெறவில்லை என் தமிழக அரசு தெரிவித்திருந்த  குற்றச்சாட்டுக்கு பதில்ளிக்கும் வகையில் ஈஷா சார்பில் விளக்கம்  அளிக்கப்பட்டுள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள், கோவையில் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈஷா யோகா கட்டடம் மற்றும் ஆதியோகி சிலை விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ளதாக கூறி,கடந்த 2017-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, ஆதிகேசவலு அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில், இதற்கான திட்ட அனுமதி, கட்டுமான அனுமதி உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை என்று தெரிவித்தது.

இதனையடுத்து, ஈஷா தரப்பு ஆவணங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, முறையான அனுமதி பெறவில்லை என்று தெரிந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் . 

ஈஷா பதில்: 

இந்நிலையில் இதுகுறித்து ஈஷா  சார்பில்  விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, தங்களிடம் ஆதியோகி சிலை நிறுவியதற்கு  உரிய ஒப்புதல்கள்  உள்ளது எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதனை சமர்ப்பிப்போம்  எனவும் தெரிவித்திருக்கின்றனர்.